2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

Editorial   / 2018 மே 02 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.கீதாஞ்சன்

போரில் பாதிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மேற்கைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினரால் வீடு அமைத்துக்கொடுப்பதுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (02)  முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இடம்பெற்றது.

போரின் போது பாதிக்கப்பட்ட மக்களில் புள்ளிவிபரத் திரட்டு ஊடாக வீட்டினை பெற்றுக்கொள்ள முடியாத குறைந்த புள்ளிகளை பெற்றவர்களும் மற்றும் இந்த வீட்டுக்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்குமாக தலா 5 இலட்சம் ரூபாய் செலவில் 25 வீடுகளை அமைத்துக்கொடுக்க தேசிய வீடமைப்பு அதிகார சபை முன்வந்துள்ளது.

இதற்கமைய குறிப்பாக தனிமையில் வாழும் வயோதிபர்கள் மற்றும் இளம் குடும்பங்கள் என பல தரப்பட்டவர்கள் இந்த வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் விஜிதகமகே, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் இ.பிரதாபன் கிராம அலுவலகர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டு வீட்டுக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .