2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘அரசியலை மக்கள் வெறுக்கின்றனர்’

Editorial   / 2017 நவம்பர் 13 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன் 

“தாங்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகளாலேயே மக்கள் ஏமாற்றப்படுவதால், அரசியலை அவர்கள் வெறுக்கின்றனர். தமது பிரதிநிதிகளிடமிருந்து உச்சபட்ச சேவையை மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அது இடம்பெறாது போகும் போது, அரசியல் தொடர்பில் அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார். 

கிளிநொச்சி - இரத்தினபுரம் கிராமத்தில், நேற்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

“எங்களுடைய தமிழ் அரசியல் தளத்தில், பொறுப்புக்கூறல் என்பது இல்லாததன் காரணமாகவே, மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் மக்களை இலகுவில் ஏமாற்றிவிட்டுச் செல்கின்றனர். ஒரு மக்கள் பிரதிநிதிக்கு இருக்கக்கூடிய கடமைகளும் பொறுப்புகளும் அதிகம்.  

“தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் முதல் அரசியல் உரிமை வரையான அனைத்து விடயங்களும் தீர்க்கப்படல் வேண்டும். வெறுமனே அரசியல் உரிமைகளை மட்டும் பேசிக்கொண்டிருக்க முடியாது.  அரசியலுரிமை பற்றி பேசுகின்ற அதேவேளை. மறுபுறம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும்.  

“தொழில்வாய்ப்பு, உட்கட்டுமானம், வாழ்வாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழ் மக்கள் இன்று தங்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் அதிகம் பலவீனமடைந்துள்ளனர். இது ஆரோக்கியமான சமூகத்துக்கு ஏற்ற சூழல் இல்லை” என, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .