2024 மே 08, புதன்கிழமை

அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி கிளிநொச்சியில் மக்கள் கிளர்ந்தனர்

Editorial   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தொனிப்பொருளில், கிளிநொச்சியில், கண்டனக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (01) முன்னெடுக்கப்பட்டது.

சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டமானது, கிளிநொச்சி டிப்போ சந்திக்கருகில், காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார், அரசியல் கைதிகளைத் தொடர்ந்தும் சிறையில் வைத்துக்கொண்டு, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதெனத் தெரிவித்தார்.

அத்துடன், இப்போராட்டத்தில் கலந்துகொண்ட வடக்கு - கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் கூறுகையில், "போரை நடத்திய மஹிந்த ராஜபக்‌ஷவால் 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய முடியும் என்றால், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய, ஏன் இந்த அரசாங்கத்தால் முடியாது" எனக் கேள்வியெழுப்பினார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X