2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’இனிவரும் காலங்கள் இக்கட்டானவையாக இருக்கலாம்’

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இனிவரும் காலங்கள் மிகவும் இக்கட்டானவையாக இருக்கலாமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இந்நிலையில், தமிழ்த் தேசிய உணர்வுடன் அனைவரும் பயணித்து, தமது இனத்துடைய இலக்குகளை அடைவதற்கு உங்களால் முடிந்த அளவுக்குப் பங்களிப்பு வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான கள நிலைமைகள் குறித்து, கிளிநொச்சியில் நடைபெற்ற கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் அமைப்பாளர்கள்  ஆகியோருடனான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் தாம் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஒரு செய்தியை கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதாவது, இலங்கைத் தீவில், பெரும்பான்மைத் இன மக்களுக்கு வழங்கப்படுகின்ற சகல உரிமைகளையும் சிறுபான்மை இன மக்களுக்கும் வழங்கக் கூடிய தலைவர்களை ஏற்றுக்கொள்வோம் என்பதையும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வைக் கோருகிறோம் என்பதையுமே  எடுத்துக்காட்டியுள்ளோமெனத் தெரிவித்த அவர், இதைப் புரிந்து கொண்டு, புதிய ஜனாதிபதி செயற்படுவாரென எண்ணுவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .