2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கலைஞர் திட்டத்தை இடமாற்றவும்’

Editorial   / 2019 மே 14 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்றொசேரியன் லெம்பேட்

மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால், வங்காலை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் குடியேற்றத்திட்டத்தை இடமாற்றுமாறு, நானாட்டான் பிரதேச சபைத் தவிசாளர் தி.பரஞ்சோதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், அவர், மன்னார் மாவட்டச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வங்காலை கிராமத்தில், 1,800 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் குடியேறுவதற்கு, அங்குள்ள காணிகள் போதுமானதாக இல்லையெனவும், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுநாவற்குளம் பகுதியில் காணப்படும் காணியில், கலைஞர் குடியேற்றத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, அப்பகுதி மக்கள் குடியேறுவதற்கு, அங்குள்ள காணிகள் போதுமானதாக இல்லையென்பதைக் கருத்திற்கொண்டு, கலைஞர் குடியேற்றத்திட்டத்தை இடமாற்றுமாறு, அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .