2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காணாமல்போனோர் உறவுகளின் போராட்டம் 1200ஆவது நாளை எட்டியது

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியாவில், சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம், இன்றுடன் (01) 1200 நாள்களை எட்டியது.

இதையொட்டி, அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக, இன்று (01) பிற்பகல் 12.15 மணியளவில், போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, “எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?” போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சமூக இடைவெளிகளை பேணி, இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டக்காரர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உடையதும் பிரித்தானியாவின் உடையதும் கொடிகளையும், சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதையற்றவர்கள் என்ற வாசகம் தாங்கிய பதாதையும் தாங்கியிருந்தனர்.

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேசாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கு மஹிந்த ராஜபக்‌ஷவின் உடையை அணிவித்து போன்றதான புகைப்படத்தையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது, அதிகளவிலான புலனாய்வாளர்கள் இந்தப் போரட்டத்தை புகைப்படம் எடுத்ததுடன், அங்கு பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .