2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காற்றாலை மின்உற்பத்தி நிலையத்துக்கு எதிர்ப்பு

நடராசா கிருஸ்ணகுமார்   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பூநகரி, கௌதாரிமுனைப் பகுதியில், காற்றாலை மின்உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிராம மட்ட பொது அமைப்புகள், பிரதேச சபை தவிசாளர் ஆகியோரால் இன்று (18), பூநகரிப் பிரதேச செலாளரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

கௌதாரிமுனைப் பகுதியில், அரச, தனியார் காணிகள் உள்ளடங்கலாக 1,703 ஹெக்டேயர் நிலப்பரப்பில், காற்றலைமின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், குறித்த காற்றலை மின்உற்பத்தி நிலையங்கள், காற்றாடிகள் ஆகியவற்றை நிர்மாணிக்கும் போது, தமது வாழ்வாதாரத் தொழில்கள் பாதிப்படையுமென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே, பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பூநகரிப் பிரதேச சபை தவிசாளராலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .