2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கால்நடைகள் களவாகக் கடத்தல்

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மேற்கில், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்துக்கும் மாந்தை கிழக்கு வழியாக வவுனியாவுக்கும் மன்னாருக்கும் தொடர்ந்து கால்நடைகள் களவாகக் கடத்திச் செல்லப்படுவதாக, கால்நடை வளர்ப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கராயன், வன்னேரிக்குளம், கோணாவில், முல்லைத்தீவின் கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், தென்னியங்குளம், பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான், ஐயன்கன்குளம் உட்பட பல கிராமங்களில் இருந்து, தொடர்ச்சியாக கால்நடைகள் களவாகக் கடத்திச் செல்லப்படுகின்றன.

இது தொடர்பாக,  அக்கராயன் பொலிஸ் நிலையம், ஐயன்கன்குளம் பொலிஸ் நிலையம் என்பவற்றில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகள் மேற்படி பொலிஸ் நிலையங்களின் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கால்நடை திருடர்கள் தொடர்பாக மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு, பொலிஸாரால் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .