2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 மார்ச் 13 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  கடந்த 2017 ஆம் ஆண்டில் கசிப்பு தொடர்பில் 324 பேரும், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 550 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதுக்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என நேற்று (12) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்வில் கருத்துத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி,

“குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிஸார் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) கூட கசிப்பு தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வாரம் பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் கசிப்பை எடுத்துச்சென்ற சமயம் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

கடந்த ஆண்டில் கசிப்பு தொடர்பில் 324 பேர் கைது செய்பப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 40 இலட்சம் ரூபாய்க்கு மேல் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து கசிப்பு வழக்குடன் தொடர்புபட்டு தண்டப்பணம் செலுத்த முடியாமல் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் பலர் இன்னமும் உள்ளனர். சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கடந்த ஆண்டில் 550 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட 60 இலட்சத்துக்கு மேல் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

இந்தக்குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதுக்கு பொலிஸார் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .