2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தட்டுவன்கொட்டிக்கு போதியளவு குடிநீர்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி தட்டுவன்கொட்டிப் பிரதேசத்துக்கு போதியளவு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது என கரைச்சிப் பிரதேச செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் தட்டுவன்கொட்டிக் கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் சீராக இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக கரைச்சிப் பிரதேச செயலரை தொடர்பு கொண்டு வினவியபோது,

“தட்டுவன்கொட்டிப் பிரதேசத்தில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 356 பேர் வரையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு 12,000 லீற்றர் அளவில் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. குடிநீருக்கு வழங்கப்படுகின்ற நீரை மக்கள் ஏனைய தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தத் தேவையான பொதுக்கிணறுகள் அங்கு காணப்படுகின்றன.

கடந்த திங்கட்கிழமை 6,000 லீற்றர் குடிநீரும் நேற்று முன்தினம் 8,000 லீற்றர் குடிநீரும் விநியோகிக்கப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் மூலம் பிரதேச சபைக்கு எவ்வித வருமானங்களும் இல்லை. வேறு வருமானங்களைக் கொண்டே இங்கு குடிநீர் வழங்கப்படுகின்றது. ஆகவே வழங்கப்படுகின்ற குடிநீரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .