2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தண்ணீர் கொண்டுசெல்ல முடியாத இடங்களுக்கு மாற்றீடு

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்துஜயன் கட்டு குளத்தின் கீழா சிறுபோக விவசாய செய்கை முன்னோடிக்கூட்டம் கடந்த 11ஆம் திகதியன்று நடைபெற்றது.

இதில் சில விவசாய நிலங்களுக்கு நீரை கொண்டுசெல்ல முடியாத நிலையில் அவர்களுக்கு வேறு சிறு குளத்தின் கீழான விவசாய செய்கைக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முத்துஜயன் கட்டுகுள நீர்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

முத்துஜயன் கட்டுகுளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கையின் நீர் வழங்கள் தொடர்பான இறுதிக்கூட்டம் கடந்த 18ஆம் திகதியன்று முத்துவினாயகர் புரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தின் முத்துஜயன் கட்டு குளத்தின் கீழான 06ஆம், 07ஆம் கட்டத்தில் 65 விவசாய பயனாளிகள் காணப்படுகின்றார்கள். அவர்களுக்கு அவர்களின் இடத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வது கஷ்டம் என்ற காரணத்தால் அவர்களுக்கு கருவேலன் கண்டல் குளத்துக்கு கீழ் நூறு ஏக்கர் நிலம் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு விவசாய செய்கை பண்ணுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த விவசாயிகள் கருவேலன் கண்டல் குளத்தின் கீழ் சிறுபோக விவசாயத்தை மேற்கொளலாம் என விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .