2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மன்னார் படுக்கையில் ஐந்து பில்லியன் கன அடியில் எண்ணெய் உள்ளதாக அறிக்கை

Editorial   / 2017 ஜூன் 27 , மு.ப. 02:28 - 1     - {{hitsCtrl.values.hits}}

 

மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கையில், 5 பில்லியன் கன அடியில் எண்ணெய்யும் 9 டிரிலியன் கன அடியில் இயற்கை வாயும் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாடாளுமன்றத்தில், அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட பொதுக் கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையிலேயே மேற்கண்ட விவரம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.   நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை பிரதியமைச்சர் லசந்த அழகியவண்ணவின் தலைமையிலான, பொதுக் கணக்குகள் பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கையிலேயே மேற்கண்ட விவரம் வெளியாகியுள்ளது.  

மன்னார் கடற்படுக்கையில் முன்னெடுக்கப்பட்ட எண்ணெய்வள ஆய்வு தொடர்பிலான, தற்போதைய நிலைமை குறித்து தெளிவுபடுத்தியுள்ள அந்த அறிக்கையில், இந்த நாட்டுக்கு சுமார் 60 வருடங்களுக்குத் தேவையான எரிபொருட்கள் மற்றும் எரிவாயு ஆகியனவற்றை இங்கிருந்தே பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த எண்ணெய்க் கிணற்றை அகழ்தல் முதல் உற்பத்தி செய்வது வரையிலான செயற்பாடுகளுக்கு, 50 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலும் செலவாகும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மன்னார் கடற்படுக்கையில், எரிப்பொருட்கள் இருப்பதாக இனங்காணப்பட்ட இரண்டாவது பிரிவில், அகழ்வு செயற்பாடுகளிலிருந்து அபிவிருத்தி செயற்பாடுகள் வரையிலான மட்டத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆகையால், தகுதியான முதலீட்டாளர்களைத் தேடிக்கொள்ளவேண்டும் என்று பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சு, பொதுக் கணக்குகள் பற்றிய குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளது.    

 


You May Also Like

  Comments - 1

  • thuva Wednesday, 28 June 2017 09:53 AM

    இந்த எண்ணெய் வளத்தை பெற்றுக்கொள்ளும் போது சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .