2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முன்னாள் போராளியின் வீடு சேதம்; விசாரணைகள் ஆரம்பம்

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்     

கிளிநொச்சி - திருநகர் தெற்கில் வசித்து வரும் மூன்று மாவீரர்களின் சகோதரியும் முன்னாள் போராளியுமான பெண் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதடன், அவர் வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு, அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சுமத்தியோடு, வீடு உடைப்பதற்கு வந்தவர்கள், தாங்கள் கிளிநொச்சி பொலிஸாரின் ஒத்துழைப்புடனே உடைத்ததாகவும் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்ற அனுமதியின்றி எந்த தனிநபரும் எவரினது வீடுகள் மற்றும் கட்டங்களை உடைக்க முடியாதெனச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அத்துமீறி  அந்தப் பெண் வசித்த வீடு  உடைக்கப்பட்டு, அவரது உடமைகள் வீதியில் எறியப்பட்டு, அவரும் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பெண்,  கிளிநொச்சி  பொலிஸார் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்காத நிலையில், இது தொடர்பில் திங்கட்கிழமை  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை அடுத்து, மனித உரிமைகள்  ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக,  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய ஆணையாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சம்பவம்  தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். ஆலுவலகம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில்  அறிக்கை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது அப்பெண் தறப்பால் கொட்டில் ஒன்றில் வசித்து வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .