2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முரண்பாட்டில் ஈடுபட்ட பௌத்த துறவிக்கு அழைப்பாணை

Editorial   / 2019 ஜனவரி 22 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு நாயாற்றுபகுதியில் உள்ள நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில்  செம்மலை கிராம மக்கள் வழிபாடு பூசைகளில் ஈடுபட்டபோது, அங்கு முரண்பாட்டில் ஈடுபட்ட பௌத்த துறவியை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் இன்று (22) அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி முல்லைத்தீவு நாயாற்றுபகுதியில் உள்ள நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில், செம்மலை கிராம மக்கள் வழிபாடு பூசைகளில் ஈடுபட்டபோது, அங்கு வந்த பௌத்த துறவியும், பெரும்பான்மையின மக்கள் சிலரும் செம்மலை கிராம மக்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அங்கு வந்த பொலிஸார் முறுகல் நிலையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதேவேளை, அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கை இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், பௌத்த துறவியையும், தமிழர் மரபுரிமை இணைத்தலைவர்களின் ஒருவரான வி.நவநீதன், ஆலய நிர்வாகிகளையும் எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றில் முன்னலையாகுமாறு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .