2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்று (22) விஜயம் மேற்கொண்ட லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் வடமத்திய மாகாண ஆளுநருமான திஸ்ஸ விதாரண மற்றும் தொழில் அதிபர்களில் ஒருவரான ரஞ்சித் அபேயசேகர ஆகியோர் மக்கள் சந்திப்புகளை நடத்தியுள்ளார்கள்.

முன்னதாக கொக்குளாய் பௌத்த விஹாரையில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பின் போது, வெலிஓயா, முகத்துவாரம், ஜனகபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

இதன்போது, மக்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வது தொடர்பில் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

குளத்து நீரை குடிநீராக பயன்படுத்துவது மற்றும் விவசாயத்துக்குப் பயன்படுத்துவது மாசுபட்ட நீரினை சுத்தம் செய்வது எவ்வாறு என மக்களுக்கு பரிசோதனை மூலம் விளங்கப்படுத்தபட்டது.

இதன்போது தெற்கைச் சேர்ந்த  முதன்மை தொழில் அதிபர் தேசபந்து லங்கா பத்ர ரன்ஜித் அபேசேகர அவர்கள் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையும் வடக்கில் நாற்பதாயிரம் வீடு அமைத்து கொடுப்பது, வடக்கு பாடசாலைகளுக்கு கட்டிட வசதிகள், யானை வேலி அமைப்பதும் உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்களுடனான முதற்கட்ட சந்திப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்காக 500 மில்லியன் யூரோ பணம் பின்லாந்து நாட்டில் நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் என்றும் இந்த  நிதியைக் கொண்டு குறித்த அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் பகுதியாகவும் விவசாயிகள் அதிகம் செறிந்து வாழும் பகுதியான ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் தமிழ் விவசாயிகளைச் சந்தித்து சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு என்று விளக்கமளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .