2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் எரிந்து நாசம்

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்  

கிளிநொச்சிக் கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்று நேற்று (12) இரவு எரிந்து நாசமாகியுள்ளது.

கடையில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக திடீர் என கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக மின்சார சபை மற்றும் கரைச்சிப் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மின்சார சபையினர் குறித்த பகுதிக்கான மின்சார இணைப்பினை துண்டித்ததன் பின்னர் அங்கு கூடிய மக்கள் தீயை பகுதி அளவில் கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்ததன் பின்னர் கரைச்சிப் பிரதேச சபை நீர்த்தாங்கிகள் மூலம் குறித்த கடைத் தொகுதியின் மேல் மாடியில் பிடித்திருந்த தீ  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது 

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்துக்கு  மீள்குடியேற்றம் புனர்வாழ்வு  அமைச்சின் 97 மில்லியன் நிதியொதுக்கீட்டில் நவீன தீயணைப்பு இயந்திரம் அடங்கலாக தீயணைப்பு பிரிவு கையளிக்கப்பட்டிருந்தது. குறித்த தீயணைப்பு இயந்திரம் இயங்கு நிலைக்கு வராமையால் குறித்த பல லட்சம் இழப்பு இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .