2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யானைகளால் தென்னைமரங்கள் அழிவு

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன் 

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த மாதம் தென்னந்தோப்புக்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் பயன்தரு தென்னைமரங்களை அழித்துள்ளன.

84 தென்னமரங்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்போக நெற்செய்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஒட்டுசுட்டான், மாங்குளம், முத்துஐயன் கட்டு, தண்டுவான், பளம்பாசி, கோடாலிக்கல்லு, களிக்காடு, முள்ளியவளை, பூதன்வயல், தண்ணிமுறிப்பு, உள்ளிட்ட பிரதேசங்களில் யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

காட்டு யானைகளை கட்டுப்படுத்த வேலி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .