2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘வலி. கிழக்கு சபை நுழைவிடங்களில் வரவேற்புத் தூண்கள்’

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி பிரதேச எல்லைகளில், மும்மொழிகளிலான வரவேற்புக் கொங்கிறீட் தூண்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், யாழ். - பலாலி வீதி, இருபாலை – கோண்டாவில் வீதி, கைதடி – மானிப்பாய் வீதி, புத்தூர் - சுன்னாகம் வீதி, இராச வீதி, அச்சுவேலி – பலாலி வீதி, தொண்டமனாறு – தெல்லிப்பளை வீதி, புத்தூர் - சாவகச்சேரி வீதி ஆகிய பிரதான வீதியில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி எல்லைகளிலேயே, கொங்கிறீட்டிலான மும்மொழி வரவேற்பு தூண்கள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக, சபை நிதியில் 1.42 மில்லியன் ரூபாய் செலவில் மதிப்பீடுகள் தாயாரிக்கப்பட்டு கேள்விக் கோரல்கள் மூலம் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

“வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, யாழ் குடநாட்டில் உள்ள பிரதேச சபையில் பரந்த பிரதேசத்தை முகாமைசெய்யும் பொறுப்பினைக் கொண்டுள்ளது. 104 சதுரக் கிலோமீற்றர் பிரதேசத்தையும் 74 ஆயிரம் வரையிலான மக்களையும் கொண்ட பரந்த சபை ஆகும். இந்நிலையில் பிரதேச எல்லைகளுக்கு வரவேற்புத் தூண்களை இடுவதன் வாயிலாக பிரதேசத்துக்குள் வருபவர்களை சிறந்த முறையில் வழிகாட்டவும் தமிழர் பண்புகளில் ஒன்றான வரவேற்கும் பாங்களை வெளிப்படுத்ததுவதாகவும் அமையும்” என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 

மேற்படி தூண்களில், “வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அன்புடன் வரவேற்கின்றது” என்ற வாசகம் முதலிலும் அடுத்து சிங்களத்திலும் அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் அமையப்பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .