2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்புக்கு முஸ்தீபு

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

எதிர்வரும் 15ஆம் திகதிக்குள், தமது கோரிக்கைகளை நிறைவேற்றாவிடின், 19ஆம் திகதி முதல், அனைத்து நகரசபை ஊழியர்களையும் இணைத்துக்கொண்டு, மாபெரும் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, வவுனியா நகர சபையின், இலங்கைத் தேசிய அரச பொது ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில், நேற்று (03) இடம்பெற்ற, ஊழியர்களின் பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சபை அமர்வின் போது, அட்டவணைப் படுத்தப்படாத ஊழியர்கள் தொடர்பான சம்பளப் பிரச்சினை, நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், அதனைத் தீர்ப்பதற்காக, வேறு திணைக்களங்களைச் சேர்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒன்று, வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஊடாக அமைக்கப்பட்டு தீர்வு காண்பதென்றுத் தீர்மானிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் தீர்வு காணப்படவில்லை என்று, மேற்படி சங்கம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, ஊழியர்களுக்கான மலசலகூடம் மற்றும் ஓய்வறை அமைத்தல், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காவல் கடமைகளை நீக்குதல், உள்ளக வெற்றிடம் உடனடியாக நிரப்பப்பட வேண்டும், நகரசபையில் களவாடப்பட்ட 3 இலட்சம் பெறுமதியான மரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட ஐந்து அம்சங்க் கோரிக்கைகளை முன்வைத்தே, இந்தப் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, மேற்படி சங்கம் மேலும் தெரிவித்துள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .