2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் பதற்றம்

க. அகரன்   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நிலையத்தில் இருந்து வவுனியா தனியார் பஸ்கள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்கச் சென்ற போது இ.போ.சபையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 

இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதிகளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம், இன்று (26) நடைபெற்றது.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து இரண்டு பஸ் சேவைகளும் சேவையில் ஈடுபடுமாறு முதலமைச்சரால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இதனை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை போக்குவரத்து சபை தரப்பால் சில பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நத்தார் மற்றும் பண்டிகைக்காலம் என்பதால் புதிய பஸ் நிலையத்தில் இருந்து முழுமையான சேவையை மேற்கொள்வதை இரண்டு வாரங்களுக்கு பிற்போடுவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், இடைப்பட்ட காலப்பகுதியில் தனியார் பஸ்ஸின் உள்ளூர் சேவைகள் மட்டும் பழைய பஸ் நிலையத்தில் இருந்தும், தூர இடங்களுக்கான சேவைகள் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் செயற்படுத்துவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளதாக, முதலமைச்சர் அமைச்சின் சிரேஷ்ட செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் நேற்று (25) தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இன்று காலை வவுனியா இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நிலையத்துக்கு தனியார் பஸ்கள் உள்ளூர் சேவைகளை முன்னெடுக்கச் சென்றபோது இலங்கை போக்குவரத்து சபையினர் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .