2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வாழ்வாதார உதவியில் மோசடி

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 மார்ச் 14 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி பரந்தன் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கு கடந்த வாரம் வழங்கப்பட்ட கால்நடை வளர்ப்பு வாழ்வாதார உதவியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் பல்வேறு திட்டங்கள் ஊடாக மீள்குடியேறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சினூடாக தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், கால்நடை வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான கால்நடைகள் வழங்கப்படாது, அவற்றுக்கான நிதி பயனாளிகளின் பெயரில் அப்போது வங்கியில் வைப்பிலிடப்பட்டு, தற்போது அவை விடுவிக்கப்படுவதுடன், அவற்றுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கே.என்-44 பரந்தன் கிராம அலுவலர் பிரிவில், கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட பெண் தலைமைத்துவக் குடும்பத்துக்கு, கடந்த 6ஆம் திகதி வழங்கப்பட்ட கால்நடை தொடர்பில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கால்நடை, 1 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டு கால்நடைகளை இடம் மாற்றுவதுக்கான ஆவணங்கள் எதுமின்றி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கால்நடை தரமற்ற கால்நடை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயனாளியின் வங்கியில் இருந்த ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை, குறித்த பயனாளியூடாக கடந்த 6ஆம் திகதி பெற்று, கண்டாவளை பிரதேசத்தில் பணியாற்றுகின்ற தனது கணவரிடம் வழங்கி, குறித்த கால்நடையை ஒரு இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்து குறித்த பயனாளிகளுக்கு வழங்கியதாக அப்பிரிவில் கடமையாற்றுகின்ற பொருளாhர அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இக்கால்நடையை விற்பனை செய்த பண்ணையாளரிடம் தொடர்புகொண்ட கேட்டபோது, குறித்த  பசுமாடு தன்னுடைய வருமானத்துக்கு ஏற்றதல்ல என கருதி அதனை 75ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கண்டாவளைப் பிரதேச செயலகத்தினால் குறித்த பயனாளிக்கு வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் கால்நடையின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாய் எனவும் அதனை கால்நடை வைத்தியர் சிபாரிசு செய்து பயனாளியிடம் கொண்டு சேர்ப்பதுக்கு 3 ஆயிரம் ரூபாய் எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

கணவனால் கைவிடப்பட்டு மூன்று பிள்ளைகளுடனும் தனது தாயுடனும் வாழ்ந்து வருகின்ற குறித்த பெண், கூலி வேலை செய்து மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வருமானத்தையே பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்வாறு மோசடியில் ஈடுபடுவது தொடர்பாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .