2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘வீட்டுத்திட்ட வசதிகள், மின்சார வசதிகள் இல்லை’

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வவுனியா வடக்கு -  நெடுங்கேணி, காஞ்சுரமோட்டை பகுதியில், 1983ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து 35 வருடங்களின் பின்னர் மீள்குடியேறிய தமக்கான வீட்டுத்திட்ட வசதிகள் மற்றும்  மின்சார வசதிகள் இதுவரை ஏற்படுத்தி தரப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு - நெடுங்கேணி பிரதேசத்துக்குட்பட்ட காஞ்சுரமோட்டை கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கடந்த 1983ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்து இந்தியாவின் தமிழகத்திலும் ஏனைய இடங்களிலும் தங்கியிருந்த நிலையல் இவ்வாண்டில் முற்பகுதியில் தமது சொந்த இடத்தில் மீள்குடியேறியுள்ளனர்.

ஆரம்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றபோதும் தற்போது 45 வரையான குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.
இந்நிலையில் 38 வரையான குடும்பங்களுக்குரிய நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு அதற்கான முதற்கட்ட கொடுப்பனவுகள் மாத்திரமே வழங்கப்பட்டு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்றும் இதனால் வீட்டுத்திட்டத்தை முழுமைப்படுத்தமுடியாத நிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதிக்கான மின்சாரம் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் இதற்குரிய மின்இணைப்புகள் மருதோடைச்சந்தியில் இருந்து நாவலர்  பண்ணை வரைக்குமான 2.5 கிலோமீற்றர் தூரத்துக்கு இணைப்புகளை பொருத்துவதற்குரிய அனுமதிகளை வனவளத்திணைக்களம் வழங்காது இழுத்தடிப்பதனால் தமது கிராமம் மின்சார வசதியின்றி மூழ்கி காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ள அதேவேளை, கிராமத்துக்கான பிரதான வீதியை புனரமைத்து தருமாறும் கோரியுள்ளதுடன், தமக்கான வீட்டுத்திட்டங்களை முழுமைப்படுத்தவும் மின்சார வசதிகளை ஏற்படுத்தி தரவும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மேற்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .