2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வைத்தியத்துறைக்கு திட்டங்கள் தயாரிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியத்துறைக்கு, இவ்வாண்டு நான்கு நிதிமூலங்களில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சுகாகதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத்துறையில், பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில், இவ்வாண்டு நான்கு திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, அக்கராயன் பிரதேச வைத்தியசாலை, தர்மபுரம் பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றில் ஆரம்பச் சுகாதாரச் சேவைகள் முறைமையை வலுவூட்டுவதற்கான திட்டத்தின் கீழ், 35 மில்லியன் ரூபாய் செலவிலான வேலைத்திட்டங்களும் 12.5 மில்லியன ரூபாய் செலவில் பளை பிரதேச வைத்தியசாலையில் கிராமிய உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேபோல, கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் கண், எலும்பு முறிவு ஆகிய சிகிச்சைப்பிரிவுக்கான அபிவிருத்தி மற்றும் மருத்துவ உபகரணக் கொள்வனவுக்காக 26.1 மில்லியன் ரூபாயும் ஏனைய மருத்துவ உபகரணக் கொள்வனவுக்காக 5 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .