2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பெனாஷீர் பூட்டோவின் கொலையை தடுத்திருக்கலாம்- ஐ.நா அறிக்கை

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாஷீர் பூட்டோவின் படுகொலையை தடுத்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக பெனாஷீர் பூட்டோ சென்றிருந்தபோது, கொல்லப்பட்டிருந்தார்.

பெனாஷீர் பூட்டோவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தால், அவரது கொலையை தடுத்திருக்க முடியும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில் குறிப்ப்டப்பட்டுள்ளது.

பெனாஷீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டவேளை, பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரப் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .