2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜப்பான் அரசாங்கத்தால் குளம் புனரமைப்பு

Freelancer   / 2022 நவம்பர் 24 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சமூக அடிப்படையிலான சிறு குளம் புனரமைப்பு திட்டத்தின்கீழ், சம்பூரில் உள்ள பெரியகுளம் 91 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டு, நேற்று (23) விவசாயிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் முதன்மை அதிதிகளாக  இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயத்தின் உதவிச் செயலாளர்கள் கலந்து கொண்டு குளத்தை விவசாயிகளின் பாவனைக்காக திறந்து வைத்தனர். இக்குளத்தை ‘பீஸ் விண்ட்ஸ்’ நிறுவனம் சிறப்பாக புனரமைப்புச் செய்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .