2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அமெரிக்காவுடன் இணைந்து ருத்திரகுமாரனை கைதுசெய்ய நடவடிக்கை:-கெகலிய ரம்புக்வெல

Super User   / 2009 டிசெம்பர் 11 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப்  புலிகள் அமைப்பின் ஆலோசகரான விஸ்வநாதன் ருத்திரகுமாரனை கைதுசெய்வதற்கான நடவடிக்கைளில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படத் தயாராகவிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பாளரான கே.பியென அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கும்,விடுதலைப்  புலிகள் அமைப்பின் ஆலோசகரான விஸ்வநாதன் ருத்திரகுமாரனுக்கும் இடையிலிருந்த தொடர்புகளை ஆதரமாகக்கொண்டு ருத்திரகுமாரனைக் கைதுசெய்வதற்கு தீர்மானித்திருப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெகலிய ரம்புக்வெல டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

இதேவேளை, ருத்திரகுமாரன் கைதுசெய்யப்படுவதற்கான குற்றச்செயல்கள் எவற்றிலும்    ஈடுபட்டிருக்கவில்லையென்பதால், அவர் கைதுசெய்யப்படமாட்டாரென தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜங்கச் செயலாளர் ரொபர்ட் பிளேக் அண்மையில் தெரிவித்திருந்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .