2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அரசியல் கைதியாக இருந்ததால் சிறைச்சாலை முறைமை பற்றி எனக்கு தெரியும் - ஜனாதிபதி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ. ஜயசேகர)

"நான் அரசியல் கைதியாக கொழும்பு மகசின் சிறைச்சாலையில் நீண்ட காலமாக இருந்துள்ளேன். எனவே, எனக்கு சிறை முறைமை பற்றி மிக நன்றாகத் தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று இடம்பெஏற்ற "கைதிகள் நலன்" தின நிகழ்வில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,  

குற்றவியல் கோவையையும் முற்று முழுதாக மாற்றி அமைக்க வேண்டிய தேவையுள்ள்து. இதன் மூலம், சிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்க முடியும். இது நாட்டுக்கும் கைதிகளின் புனர்வாழ்வுக்கும் நன்மையாக இருக்கும்.

கீழ்மட்ட நீதிமன்ற நீதிவான்கள், சிறு குற்றம் இழைத்தவர்களை சமூக சேவைக்கு அனுப்ப வழிவகுக்கும் சட்ட ஏற்பாடுகளைப் பயன்படுத்துவதில்லை.

ஐ.ஆர்.சி.க்களும் போதை வஸ்து பெரும் முதலாளிகளும் குற்றச் செயல்களை தொழிலாக செய்வோரும் பாதுகாப்பாக இருந்துகொண்டு தொலைபேசி, கூட்டாளிகளின் துணையோடு குற்றச் செயல்களை தொடர்வதற்கான இடமாக சிறைச்சாலைகள் மாறிவிட்டன எனவும் ஜனாதிபதி கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0

  • jameel Wednesday, 15 September 2010 01:28 AM

    இது அதி மேதகு ஜனாதிபதியின் உண்மையான கூற்று

    Reply : 0       0

    xlntgson Thursday, 16 September 2010 09:58 PM

    ஜனாதிபதி அரசியல் கைதியாகத்தான் இருந்திருக்கிறார். அவர் விசாரணை கைதியாக இருந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. அநேகர் விசாரணை கைதியாகவே வாழ்நாளை கழித்து கடைசியில் நிரபராதியாக காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். அபராதம் செலுத்த வேண்டியவர்களை கட்டாயமாக வேலைவாங்க முடியுமா? அவர்கள் வேலை செய்ய உடல் தகுதியோடு இருப்பார்களா? கசைஅடி கொடுத்தால் நல்லது சிங்கப்பூர் போல. அபராதம் செலுத்த காசில்லை என்றோ யாரும் அவருக்காக பிணை செலுத்த வரவில்லை என்பதற்கோ சிறைவாசம் அனுபவிப்பவர்களை சில காலம் சென்று மன்னிக்கலாம், IRC?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .