2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்று முதல் மரண தண்டனை

Freelancer   / 2022 நவம்பர் 24 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருத்தம் செய்யப்பட்டுள்ள நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டம் இன்று முதல் அமுலில் இருக்கும்.

இந்த புதிய சட்டத்தின் கீழ் ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி, நச்சுப்பொருள், அபின், அபாயகர ஒளடதங்கள் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. 

போதைப்பொருளை கொண்டு வருதல், வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்தல் தொடர்பில் காலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .