Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் இது தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது அவர் தெரிவித்தார். இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் கடந்த சனிக்கிழமை காலை தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஐந்து பேர் முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நால்வர் முகாமில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார்கள். ஒருவர் காணாமல்போயிருந்தார். அவரின் சடலம்தான் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து பின்னர் மீட்கப்பட்டுள்ளது.
முகாமுக்குள் வைத்து இராணுவத்தினர் தம்மை மிக மோசமாகத் தாக்கினார்கள் என்று தப்பித்து வந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் குளத்தில் வீசப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும், பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம்.
இவ்வாறான நிலையில் சனிக்கிழமை மாலை ஒட்டுசுட்டான் பொலிஸாரினால் ஒருசில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதான விடயம் யாதெனில் ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது பிரயோசனமற்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் அந்தப் பிரதேச மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள். மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றார்கள். இதற்குச் செம்மணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார். (a)
2 hours ago
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
7 hours ago