2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முழு நீதியரசர் குழாம் ஏன் வேண்டும்

Kanagaraj   / 2016 ஜூலை 26 , மு.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக சொகுசுவாகனங்களை, தீர்வையற்ற முறையில் இறக்குமதி செய்வதனை இடைநிறுத்த, இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி  உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி நாகாகந்த கொடிதுவக்கே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், பிரதிவாதிகளாக நிதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த மனுவை முழு நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் அம்மனுவில் கோரியிருந்தார்.

மனு, உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.என் ஸ்ரீ பவான், நீதியரசர்களான புவனகே அலுவிஹார, பிரியசான் டெப் ஆகியோர் முன்னிலையில் நேற்றுத் திங்கட்கிழமை ஆராயப்பட்டது.

இந்த மனுவை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், இம்மனுவை முழு நீதியரசர் குழாம் முன்னிலையில் ஏன்? விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் எழுத்துமூலமாக தெளிவுப்படுத்துமாறு, மனுதாரரான சட்டத்தரணியிடம் கேட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .