2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

13 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை கடத்தல் தலைவன் கைது

Freelancer   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை - மத்திய போதை தடுப்பு பிரிவு பொலிஸான என் சி பி அதிகாரிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி, மதுரைக்கு செல்ல இருந்த ரவிக்குமார், மாலினி  தம்பதியினரை பிடித்து விசாரித்தனர். 

அவர்கள் பைகளில்33 கோடி ரூபாய் மதிப்புடைய 3.3 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையைச்சேர்ந்த முகமது முனாவர் என்பவர் தான், இந்த போதைப் பொருளை தங்களிடம் கொடுத்து, மதுரையில் உள்ள மற்றொரு, இலங்கை நபரிடம் கொடுக்கப்படி கூறினார். அதற்காக முகமது முனாவர் எங்களுக்கு, ரூ.10,000  கொடுத்தார் என்றும் கூறினர். 

இதை அடுத்து மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள், கணவன் மனைவி இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு, கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மனைவிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 

ஆனால் இந்த போதைப் பொருளை கொடுத்து அனுப்பிய, முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான இலங்கையை சேர்ந்த முகமது முனாவர், கைது செய்யப்படாமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். 

இந்த நிலையில் முகமது முனா வரை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக, மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் அறிவித்தனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம், இலங்கையில் இருந்து சென்னை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும், பிரபல போதை கடத்தல் கும்பலின் தலைவனான முகமது முனாவரும், இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்திருந்தது அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்த பொழுது தெரியவந்தது. 

இதை அடுத்து அவரை கைது செய்து சட்டநடவடிக்கள் மேற்கொள்வதற்காக மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, பிரபல போதை கடத்தல் கும்பலின் தலைவன், இலங்கையில் இருந்து சென்னை வந்த போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X