2024 மே 08, புதன்கிழமை

ஆஸி. அணித் தலைவராக மைக்கல் கிளார்க் நியமனம்

Super User   / 2011 மார்ச் 30 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி தோல்வியுற்றதையடுத்து அவ்வணியின் தலைவர் பதவியிலிருந்து ரிக்கி பொன்டிங் நேற்று ராஜினாமா செய்தார்.  அதையடுத்து மைக்கல் கிளார்க்கை புதிய அணித் தலைவராக அவுஸ்திரேலிய கிரிககெட் சபை இன்று அறிவித்தது.  

எதிர்வரும் சனிக்கிழமை தனது 30 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில் மைக்கல் கிளார்க் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறப்பிடத்கதக்து.

அவரின் தலைமையில் அவுஸ்திரேலிய அணி முதலில் பங்களாதேஷுக்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளது. அவ்வணியின் புதிய உபதலைவராக ஷேட் வட்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷுடன் 3 போட்டிகளில் பங்குபற்றவுள்ள அவுஸ்திரேலிய அணியில் ரிக்கி பொன்டிங்கும் இடம்பெற்றுள்ளார்.

'அணித் தலைவராக நியமிக்கப்பட்டமை ஒரு கௌரவமாகும். அணித்தலைவர் பதவியிலிருந்து ரிக்கி விலகியமை பெரும் ஆச்சரியமளிக்கிறது' என மைக்கல் கிளார்க் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

ரிக்கி பொன்டிங் தலைவர் பதவியிலிருந்து விலகுவார் என்பதை தான் அறிந்திருக்கவில்லை எனவும் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • sssdd Thursday, 07 April 2011 11:34 PM

    ;;;l;tyutii

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X