2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்த வாரபலன்கள் (05.09.2010 – 11.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

இந்த வாரபலன்கள் (05.09.2010 – 11.09.2010)
 


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சொல் - செயல்களில் தெளிவும் சஞ்சல மனம் பிறகு தெளிவு உடையவர்களான மேட ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு புதிய திட்டங்கள் மூலம் வெற்றி கிடைத்தல், அதனால் மனநிறைவு ஏற்படும். புது வீடு அல்லது தொழில் ஸ்தானத்தில் குடிபுகுதல், நாவுக்கு சுவை தரும் உணவு உண்ணல், பெண்களினால் உதவிகள்- நன்மைகள் ஏற்படும். சில மனகுழப்பம், சங்கடங்கள் ஏற்படக்கூடும். பேச்சுவார்த்தையில் நிதானம் தேவை. வாக்குவாததிற்கு வழி வகுக்கும். வரவுக்கு மீறிய செலவு ஏற்படக் கூடும். இன்பமான உறக்கம் நம்மை வழி நடத்தும். பெரியோர்களின் அறிவுரையும் ஆசீர்வாதமும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 7
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்.
வழிபாடு: பிரம்மா

 


கிருத்திகை 2, 3, 4,  ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் சாதனங்களை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு தொடங்கியது அல்லது தொடங்கவிருக்கும் காரியத்தில் தடை, தோல்வி ஏற்படக்கூடும். நிதானத்துடன் செயலாற்றவும். தீய நண்பர்களின் சகவாசத்தல் நஷ்டம், பிரச்சினை ஏற்படக் கூடும். மனதால் அலைச்சல், குழப்பம் ஏற்படக்கூடும். ஆடம்பரத்திற்காக அதிக செலவுகள் ஏற்படக்கூடும். தொலைந்த பொருட்களை மீண்டும் பெற்றுக்கொள்ள கூடும். உழைப்பில் அதிக ஊக்கம் எடுத்தல் நன்று. அரசாங்க ஊழியர்களால் உதவி கிடைக்கும். இந்த வாரத்தில் செய்யும் செயல்களில் அதிக நிதானத்துடன் நடக்கவும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.  

அதிர்ஷ்ட திகதி: 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டு துணி  
வழிபாடு: குருபகவான்




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தீவிரமோ தொய்வோ இல்லாத மிதமான போக்குடையவர்கள்...  மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். அரசாங்க ஊழியர்கள் மூலம் உதவி கிடைத்தல், உயர் அதிகாரிகளுடன் பகை ஏற்படாத வண்ணம் நடக்கவும். உணவில் வெறுப்பு ஏற்படக்கூடும். வீண் அலைச்சல் ஏற்படக்கூடும். இசை துறையில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிபிரயணத்தால் பணவரவு ஏற்படும். இடம் அல்லது தொழில் ஸ்தானத்தில் மாற்றம் ஏற்படும். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். சாதுக்களின் தரிசனம் கிடைத்தல், இன்பம்.

அதிர்ஷ்ட திகதி: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

பிடிவாதமான குணமும் சாதுர்யமும் தைரியமும் அனைவரிடமும் அன்பு கொண்ட கடகராசி  அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு மனதால் குழப்பம், சங்கடம் எற்பட்டு நீங்கும். ஆச்சரியமான, விசித்திரமான செய்தி கேள்விப்படுவீர்கள். அதன்மூலம் மனம் நிறைவு ஏற்படும். உறவினர்கள் வருகையால் இன்பம் ஏற்படும். புதிய முயற்சியால் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில்  உள்ளவர்கள் மூலம் நல்ல செய்தி கேள்விப்பட வாய்ப்புண்டு. பிறருடைய உதவியை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். காய்ச்சல்- தலைவலி ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் அவதானம் தேவை. உயர் அதிகாரிகளும் மிகவும் அவதானத்துடன் நடக்கவும். செய்யும் எல்லா செயல்களிலும் நிதானத்துடன் நடக்கவும். தெய்வ வழிபாட்டில் அதிக அக்கறை எடுக்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டு துணி  
வழிபாடு: குருபகவான்



மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வாக்கு சாதுர்யம், மனோபலம் உள்ளவர்கள். சற்று அகம்பாவம் உள்ளவர்கள். அதிகார தன்மை உடைய சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு இசைதுறையில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிபிரயாணத்தால் பணலாபம். அறுசுவையான உணவு கிடைக்கும். பொழுதுபோக்குகளில் அவதானம் தேவை. குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கேள்விப்பட வாய்ப்புண்டு. வீண் மனஸ்தாபம், உஷ்ணம் ஏற்படக்கூடும். முயற்சியில் சில தடை ஏற்படக்கூடும். உறவினர் வருகையினால் இன்பம் ஏற்படும். அரசாங்க தொழில் வாய்ப்பு கிடைக்கக்கூடும். பிறர் உதவி நாடவேண்டிய நிலை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் அவதானம் தேவை. மகான்களின் தரிசனம் கிட்டும்.

அதிர்ஷ்ட திகதி: 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு மனதுக்கு பயம் உணர்வு ஏற்படக்கூடும். வெளிப்பயணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடன் நிதானத்துடன் நடக்கவும். அழகிய, புதிய ஆடை- ஆபரணங்கள் சேரும். வியாபாரத்தில் புதிய வழி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் அன்யோன்யம். சில குழப்பம், அலைச்சல் ஏற்படக்கூடும். பெண்களால் உதவி கிடைக்க வாய்ப்புண்டு. அநாவசிய பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புண்டு. வார்த்தைகளை பிரயோகிப்பதில் நிதானம் தேவை. விசித்திரமான, ஆச்சரியமான பொருட்களை காணக்கிடைத்தல். அதனால் மனம் அமைதி, தெய்வீக வழிபாட்டில் அக்கறை செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
வழிபாடு: சிவன் (சந்திரன்)

 


சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

எவரையும் எதையும் ஒருமுறை பார்த்ததுமே துல்லியமாக எடைபோடக்கூடியவர்கள். ஆடம்பரமான வாழ்கை உள்ள துலா ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு உற்சாகத்துடன் நல்ல காரியங்களை செய்வதற்கு வழி கிடைத்தல், அதனால் பணவரவு கிடைக்கும். அரசாங்க அவதிகாரிகளின் மூலம் உதவி கிடைக்கும். வேண்டாத உணவால் பிரச்சினை. நம்மை வழி நடத்தும் பெரியோர்களின் தரிசனம் கிடைக்கும். தீய நட்பால் பிரச்சினை ஏற்படக்கூடும், நிதானம் தேவை. இடம் அல்லது தொழில் மாற்றத்திற்கு வழிவகுக்கும். பெண்களால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். புதிய ஆடை - ஆபரணங்கள் சேரும். முயற்சியுடனும் நிதானத்துடன் நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அவதானம் தேவை.

அதிர்ஷ்ட திகதி: 11
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்    
வழிபாடு: சிவன் (சந்திரன்)

 


விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு உடலில் சில உபாதைகள் ஏற்படக்கூடும். பெண்களுடன் விவாதம், வார்த்தைகளை பிரயோகிப்பதில் நிதானம் தேவை. வியாபாரத்தில் முன்னேற்றம், லாபம் ஏற்படகூடும். அதனால் எதிர்பார்த்த பணவரவு கூடும். சாதனைகள் மூலம் வெற்றி கிடைக்கும். அதனால் இன்பம் ஏற்படும். உடலுக்கு ஒவ்வாத உணவை தவிர்க்கவும். விநோத பயணங்கள் செல்ல வழி கிடைத்தல். திருட்டு பயம் ஏற்படக்கூடும், அவதானம் தேவை. அனாவசிய செலவு, நல்ல காரியம் செய்ய வழி கிடைத்தல். மனதுக்கு நிறைவான செயல்கள் நடக்கும். கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 9
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி


 


மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

வைராக்கியம், திடசிந்தனை, நேர்மை, நல்லொழுக்கம் உடைய தனுசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு இசையில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் துயரம் நீங்கும். மன நிறைவு பெறும். உறவினர்கள் அன்யோன்யம் ஏற்படும். சுவையான உணவில் விருப்பம் அதிகரிக்கும். சில அலைச்சல், குழப்பம், தடை ஏற்பட்டு நீங்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கேள்விப்படுதல். தொலைந்த பொருள் கிடைத்தல், அரசாங்க நிறுவனத்தில் உதவி கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் எடுக்கவேண்டும். இறைவழிபாட்டுக்காக அதிக நேரத்தை செலவிடவும். சில துன்பம். துயரம் வந்து மறையும்.

அதிர்ஷ்ட திகதி: 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டு துணி  
வழிபாடு: குருபகவான்

சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 04ஆம் திகதி மு.ப. 5.07 மணியிலிருந்து செப்டெம்பர் 06ஆம் திகதி மு.ப. 5.42 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தெய்வீக பலன் பெற்றவர்களே! நினைத்ததை சாதிக்கும் வல்லமைபடைத்த மகர ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு தொழில் ஸ்தானத்தில் உயர் அதிகாரிகளுடன் விவாதம் ஏற்படாத வகையில் செயல் ஆற்றவும். முயற்சி செய்த காரியத்தில் நல்ல பலன் கிடைக்கும். அறுசுவை உணவு கிடைக்கும். இடமாற்றம் அல்லது தொழில் மாற்றம் ஏற்படக்கூடும். குடும்பத்தில்  பெண்களால் உதவி கிடைக்கும். வெளி பிரயாணத்தின் மூலம் உதவி கிடைக்கும். சக ஊழியர்களின் அன்பை பெற்று கொள்ளலாம். சுகமான உறக்கம் கிடைக்கும். புதிய முயற்சிகளை தொடங்கலாம்.

அதிர்ஷ்ட திகதி: 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் பட்டு துணி  
வழிபாடு: குருபகவான்

சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 06ஆம் திகதி மு.ப. 5.42 மணியிலிருந்து செப்டெம்பர் 08ஆம் திகதி மு.ப. 4.51 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 


அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9 பாதங்கள்.

ஆடம்பரம் இன்றி நடப்பவர்களே… புத்திரர்களால் அதிகளவில் அதிர்ஷ்டம், செல்வாக்கு பெற்ற கும்ப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதனால் பணவரவு கூடும். அரசாங்க ஊழியர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் நன்மை, இன்பம் ஏற்படும். அதிகாரிகளுடன் பகை ஏற்படாத வண்ணம் நடக்கவும். சிலவிதமான சிக்கல்கள், குழப்பம் ஏற்படும். தீய நண்பர்களால் பிரச்சினை ஏற்படக்கூடும். இசைதுறையில் ஆர்வம் அதிகரிக்கும். அழகிய ஆடை- ஆபரணங்கள் சேரும். மனதில் ஓர் அமைதி நிறைவு ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுதல் நல்லது.

அதிர்ஷ்ட திகதி: 7
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா

சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 08ஆம் திகதி மு.ப. 4.51 மணியிலிருந்து செப்டெம்பர் 10ஆம் திகதி மு.ப. 4.46 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள், யாரிடமும் மனம் விட்டுப்பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு புதிய திட்டங்களை தொடங்கலாம். அதன் மூலம் வெற்றியும் லாபமும் ஏற்படும். சில மனகுழப்பம், சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். பெண்களுடன் விவாதம் ஏற்படக்கூடும். பேச்சுவார்த்தையில் நிதானம் தேவை. பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் எடுக்கவும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வர வாய்ப்புண்டு. சில உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் அவதானம் தேவை. உடலுக்கு ஒவ்வாத உணவை தவிர்க்கவும். சில அலைச்சல்கள் ஏற்படும். மகான்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். நன்மை பயக்கும் செயல்களை செய்ய வழி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 9
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 10ஆம் திகதி பி.ப. 4.46 மணியிலிருந்து செப்டெம்பர் 13ஆம் திகதி மு.ப. 7.07 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .