2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லொஹானுக்கு எதிராக முறைப்பாடு

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பும் தேசிய அதிகார சபையில் முன்னிலை சோஷலிச கட்சியால், நேற்று (16) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் இராஜாங்க அமைச்சர், இந்த மாதம் 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 கைதிகளை சிறைச்சாலைகளுக்கு மத்தியில் இழுத்து
வந்து, மண்டியிட வைத்ததுடன், இதில் தமிழ் அரசியல் கைதிகளான தர்சன் மற்றும் சுலக்ஷன்
ஆகிய இருவரையும் முழந்தாளிடச் செய்து தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய
சம்பவம் மிகவும் மோசமானதாகும்.

குறித்த கைதிகள் தேசிய ரீதியில் இடம்பெற்ற சம்பவங்களின் சாட்சியாளர்கள். எனவே
இவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு சிறைச்சாலைகள் திணைக்களம் உள்ளிட்ட அரச
நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனினும் அவ்வாறான பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல், இச்சம்பவம் தொடர்பில்,
சிறைச்சாலைகள் ஆணையாளர் அவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகவில்லை என பொறுப்பற்ற முறையில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சர் அதனை ஏற்றுக்கொண்டுள்ள
நிலையில், இச்சம்பவம் நடந்து 24 மணிநேரமாகியும் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு
தெரியாது என்பது மிகவும் மோசமான விடயமாகும்.

எனவே, இந்த சம்பவம் குறித்து தெரிந்தும் அது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்காமல் இந்த
சம்பவத்தை ஆணையாளர் மறைக்க முயற்சித்துள்ளமை அதைவிட மோசமான விடயமாகும்.
இதற்கு முன்னரும் சிறைச்சாலைக்குள் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இது கைதிகளின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுக்கமைய,
சிறைக்கைதிகளைப் பார்வையிட அவர்களது சட்டத்தரணிகளுக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ள
நிலையில், இராஜாங்க அமைச்சர் தனது குழுவினருடன் சென்றுள்ளமை வியப்பளிக்கின்றது.

தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு இராஜாங்க அமைச்சர் தனது பதவியை இராஜினாமா
செய்திருந்தாலும் அவருக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அதேபோல் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் தொடர்பில் விசாரணைகளோ
இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதுடன், அவர்கள் கைதுசெய்யப்படவும் இல்லை என,
முன்னிலை சோஷலிச கட்சியின் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .