Kanagaraj / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்
பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் சித்திரப்போட்டியொன்று, சனிக்கிழமை (30) ஒழுங்குசெய்யப்பட்டு நடத்தப்பட்டது.
ப்போட்டி நிகழ்ச்சியில் அட்டாளைச்சேனை கல்வி கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 6-15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தேசிய பாதுகாப்பில் முக்கியத்துவம் செலுத்தும் 'பொலிஸ் சேவை' ,'பொலிஸ் மாமாமார் இல்லாத நகரம்','பிள்ளைகளே நீங்கள் கவனம் நாம் உங்களைப்பற்றிய அவதானத்துடன்...','இலங்கை பொலிஸ் பொதுமக்களுடன் கைகோர்த்துள்ளது', 'எந்நேரமும் பாதுகாப்பிலுள்ள பொலிஸ் சேவை' ,'நான் காணும் தற்போதைய பொலிஸ் சேவை','சமூகமும் பொலிஸும்', 'பொலிஸ் மாமா எமது பாதுகாவலர்','மதுபானம் வாகன விபத்து சிறுவர் பாதுகாப்பு என்பவற்றுக்கு பொலிஸார் எடுக்கும் நடவடிக்கை' ஆகிய தலைப்புக்களில் மாணவர்களினால் சித்திரங்கள் வரையப்பட்டன.
இப்போட்டி மூலம் முதல் மூன்றிடங்களைப் பெறும் மாணவர்களுக்கும் மேலும் பத்து மாணவர்களுக்கும் பொலிஸ் திணைக்களத்தினால் சான்றுதழ்களும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம் றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் ஏ.எல் கமறுதீன், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.டி.ஏ விமலசேன, பொலிஸ் உத்தியோகத்தர்களான எம். றிஸ்வான், ஏ.எல் அப்துல் லத்தீப், எஸ்.எல் ஆதம்பாவா ஆகியோர் கலந்துகொண்டனர்.




25 minute ago
38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
38 minute ago
43 minute ago