2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

இராணுவ வீரரின் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை, அன்னமலை -2 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வேப்பையடி இராணுவ முகாமில் இராணுவ வீரர் ஒருவரின் சடலம், இன்று (07) அதிகாலை 5 மணியளவில் மீட்கப்பட்டு, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மாவட்டம், சிறிபுர பகுதியைச் சேர்ந்த யு.ஏ சுஜீத் பாலசூரிய (வயது-37) என்பவரே உயிரிழந்தவராவார்.

தனக்கு நெஞ்சு வலிப்பதாக, சக இராணுவ வீரரிடம் கூறிய பின்னர் திடீரென மயக்கமடைந்து நிலத்தில் விழுந்துள்ளார். பின்னர் இராணுவ வீரர்கள் உடனடியாக குறித்த வீரரை மீட்டு, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர், இறந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .