2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

'பொத்துவிலைச் சேர்ந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படவில்லை'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்கின்ற  புனர்வாழ்வு பெற்ற 05 முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு  புனர்வாழ்வு அமைச்சின் ஏற்பாட்டில் வீடுகள் இதுவரையில் அமைத்துத் தரப்படவில்லை என்பதுடன், ஏனைய உதவிகளும்; கிடைக்கவில்லை எனவும் அக்குடும்பங்கள் தெரிவித்தன.

புனர்வாழ்வு பெற்ற  முன்னாள் போராளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்களைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, திருக்கோவில் கள்ளீயந்தீவு பாடசாலையில் நேற்று (12) நடைபெற்றபோதே, அவர்கள் இதனைக் கூறினர்.  

இங்கு அவர்கள் மேலும் தெரிவித்தபோது, 'திருக்கோவில், நாவிதன்வெளி மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவுகளில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு வீடுகளும்; ஏனைய வாழ்வாதார உதவிகளும் அரசாங்கத்தாலும் ஏனைய தொண்டு நிறுவனங்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், பொத்துவில் பிரதேசத்திலுள்ள எங்களுக்கு எந்தவித உதவியும் வழங்கப்படவில்லை.

இவ்வருட நடுப்பகுதியில் பொத்துவில் பிரதேசத்துக்கு  வருகைதந்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் எமது கோரிக்கைகள் அடங்கிய  கடிதம் வழங்கியதாகவும் இதற்கு தாம் உதவி; செய்து தருவதாக அவரிடமிருந்து பதில் கடிதம் கிடைத்தது. இருப்பினும், இதுவரையில் எமக்கு எந்தவித  உதவியும்  செய்து தரப்படவில்லை. எனவே, எங்களுக்கு வீடு உள்ளிட்ட ஏனைய உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்' என்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .