Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன், கனகராசா சரவணன்,வி.சுகிர்தகுமார்
அம்பாறை,ஆலையடிவேம்பு பிரதேச பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தை கிராமத்தில் 14 மற்றும் 15 வயது நிரம்பிய தனது மகள்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 31 வயதுடைய தந்தை ஒருவரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று புதன்கிழமை(30) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமிகளின் தாயார் சகோதரனுக்கு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்து பராமரித்து வருகின்ற நிலையிலேயே தனிமையில் இருந்த சிறுமிகளை குறித்த நபர் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அயலவர்களுக்கு தெரியவந்ததையடுத்து குறித்த நபரை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த நபர் தனது மகள்களில் ஒருவரை கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நிலையில், அச்சிறுமியை சிறுவர் இல்லத்தில் அரசசார் பற்ற நிறுவனம் ஒன்றினால் சேர்க்கப்பட்டு பின் மீண்டும் தாயாருடன் இருந்து வரும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
19 minute ago
1 hours ago
1 hours ago