2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.சரவணன்)

நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில், விநாயகபுர முகத்துவார பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

முகத்துவாரம் தென்னந்தோப்பு பகுதியில் குறித்த காதல் ஜோடி மயக்கமுற்ற நிலையில் காணப்படுவதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்தே அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டி.ரணதுங்க தெரிவித்தார்.

திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவ்விருவரும், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .