2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு கல்முனையில் நிகழ்வுகள்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.எ.அஸீஸ்)

சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகத்தின் சமுர்த்தி சமுக அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் கல்முனை கிறிஸ்தா இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது. கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளானது முக்கிய நான்கு விடயங்களை உள்ளடக்கியதாக காணப்பட்டது.

35மாணவர்களுக்கு சிரிதிரிய புலமைப்பரிசில் வழங்குதல், 50வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குதல், கலை கலாச்சார போட்டியில் தேசிய விருதுகளைப் பெற்ற சிறுவர்களை கௌரவித்தல் மற்றும் மாணவர்கள் கல்வி தொடர்பான வேலைத்திட்டங்களில் மிகச்சிறப்பாகச் செயற்பட்ட உத்தியோகத்தர்களை கௌரவித்தல் போன்றன இடம்பெற்றன.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி உதவிப் பணிப்பாளர் கே.டபிள்யு.கிருந்தக்கே, கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.டி.ஏ தௌபீக் உட்பட வலயக்கல்வி அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .