2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.சரவணன்)

திருக்கோவில், கள்ளியந்தீவு சுனாமி வீட்டுத்திட்டத்தில் 60 குடும்பங்கள், கடந்த 5 வருடங்களுக்கு மேலாக மின்சாரம், குடிநீர் வசதிகள் இன்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவாக பாதிக்கப்பட்ட மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2004 சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கபட்ட திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 60 குடும்பங்களை  கள்ளியந்தீவு பிரதேசத்தில் வீடுகள் நிர்மானிக்கப்பட்டு 2005 ஆண்டு கையளிக்கப்பட்டது. இவ்வீட்டுத்திட்டத்தில் மின்சாரம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பவில்லை.

இதனால் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக குப்பிவிளக்கில் வாழ்ந்து வருவதாகவும் மாணவர்கள் கல்விகற்க முடியாமலும் குடீநீருக்கு அலைந்து திரியவேண்எயுள்ளதுடன் வீதிகள் நிர்மாணிக்கப்படாமல் பிரயாணிக்க முடியாமல் பல்வேறு அசொளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசணம் தெரிவிக்கின்றனர்.

இவ் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்தோம். இன்றுவரை இவ் அடிப்படை வசதிகள்  ஏற்படுத்தி தரப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். தமக்கு மின்சாரம் வருமா என மக்கள் வினா எழுப்புகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .