2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

குன்றும் குழியுமான நிலையில் பஸ் நிலையத்திலிருந்து செல்லும் வீதி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.சரவணன்)

அம்பாறை நகர் மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்து பிரதான பஸ் நிலையத்திற்குச் செல்லும் 150 மீற்றர் நீளமான வீதி பிரயாணிகள் பயணம் செய்ய முடியாத நிலையில் குன்றும் குழியுமாக உள்ளது.

இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொது மக்கள் கடும் விசணம் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் மழைக்காலங்களில் இவ்வீதியில் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக இவ்வீதி வழியால் அம்பாறை பஸ் நிலையத்திற்கு பாதசாரிகளும் வாகனங்களும் பயணிக்க முடியாமல் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடும் என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .