2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

அல்-ஜலால் பாடசாலை வீதி கொங்கிரீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 11 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் விசேட கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ்,  அல்-ஜலால் பாடசாலை வீதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஒரு மில்லியன் ரூபாய் நிதியொதுக்கிட்டின் மூலம் கொங்கிரீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.

திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இவ்வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் பொதுமக்கள், வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் பயனடையவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .