2021 ஜூலை 31, சனிக்கிழமை

சிறுவர் உரிமை பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம்

Super User   / 2010 நவம்பர் 11 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கிழக்கு மாகாண சிறுவர் உரிமை பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மனித அபிவிருத்தி ஸ்தாபனமும் கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த, சிவில் சமூத்துடன் இணைந்து செயற்படும் அமைப்புக்களுடனான கலந்துரையாடலும், விழிப்பூட்டல் நிகழ்வும் இன்று கல்முனை கிறிஸ்டா இல்லம் மன்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் சட்டத்தரணி எம்.எம். சறூக், இலங்கை மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளர் பி.பி. சிவப்பிரகாசம் ஆகியோர்களின் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில், அம்பறை மாவட்ட கரையோர பிரதேச சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பாகவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமை மீறல்களின் போது சிவில் சமூகத்துடன் இணைந்து எவ்வாறு செயற்படுதல் என்பது பற்றியும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .