2021 ஜூலை 31, சனிக்கிழமை

மாணவர்கள் இல்லாததால் மூடப்படும் நிலையில் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம்

Kogilavani   / 2011 மார்ச் 30 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம், மாணவர்கள் எவரும் இல்லாமையால் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தரம் ஒன்று முதல்  தரம் 11 வரையான மாணவர்கள் கல்வி கற்ற இப்பாடசாலையில்  கடந்த 2009 ஒக்டோபர் 29ஆம்  திகதியிலிருந்த  இன்று வரை எந்த ஒரு மாணவரும் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.  இதனால், அப்பாடசாலையின் அதிபரும் ஏனைய ஆசிரியர்களும் அருகிலுள்ள பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.

மாணவர்கள் எவரும் இல்லாததனால்  கட்டிடங்களைச் சூழ புற்கள் வளர்ந்து காடாக காணப்படுவதுடன் மாணவர்கள் பாவித்த தளபாடங்கள், பாடசாலை உபகரணங்கள், நூலக புத்தகங்கள், விஞ்ஞான ஆய்வு கூட உபகரணங்கள் அனைத்தும் பழுதடையும் நிலையில் உள்ளன.

அம்பாறையில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்திலிருந்து ஏழு கிலோ மீற்றருக்கு அப்பால் இப்பாடசாலை அமைந்திருப்பதே மாணவர்கள் கல்வியில் ஆர்வம் செலுத்தாமைக்கான காரணம் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .