Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 31 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 'சமாதான சந்தை' எனும் நிகழ்வு நேற்று புதன்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களை அறிமுகம் செய்தல் மற்றும் குறைந்த விலைகளில் பொருட்களை நுகர்வோர் கொள்வனவு செய்ய உதவுதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்;த 'சமாதான சந்தை'யில் அம்பாறை, பொலன்னறுவை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மூவின உற்பத்தியாளர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு தும்பு, பிரம்பு, மட்பாண்டம் மற்றும் நூல் உற்பத்திப் பொருட்கள் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மனித எழுச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த 'சமாதான சந்தை' காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago