2021 ஜூலை 31, சனிக்கிழமை

வடிகாலமைப்பு வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு

Kogilavani   / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்படவிருக்கும் 70 இலட்சம் ரூபா பெறுமதியான கல்முனை தெற்கு வடிகாலமைப்பு வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நாளை மாலை கல்முனை-03 ஆம் பிரிவின் கோயில் வீதியில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

இப்பிரதேசத்தின் சுமார் 30 வருடகால  தேவையாக காணப்பட்ட இந்த வடிகானமைப்பு வேலைத்திட்டமானது,  யூ.என்.ஹெபிடாட் அனுசரணையுடன் ஜேர்மனி நாட்டு நியூரம்பேக் நகர மக்களின் நிதியுதவியுடனும் கல்முனை மாநகர சபை நிதிமூலமும் இந்த நிகழ்ச்சித்திட்டம்  இடம்பெற உள்ளது.

கல்முனை மாநகர சபையின் மேயர் எஸ்.இஸட். எம். மசூர் மௌலானா தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொள்ள உள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .