2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

வடிகான் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை 03 ஆம் பிரிவில் வடிகால் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபை மேயர் எஸ்.இசெட்.எம். மசூர் மௌலான தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  மேயர், பிரதிமேயர் ஏ.ஏ.பஷீர்,  கண்ணகி அம்மன் கோவிலின் தர்மகத்தா சின்னத்தம்பி சிலுவைராஜா,  கடற்கரைப்பள்ளி நிருவாகி எம்.வை.எம்.யுசூப்,  மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன்,  இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஏகாம்பரம்,  யு.என் ஹெபிடாட்டின் நிருவாகப்பணிப்பாளர் அருட்செல்வன் உட்பட மாநகரசபையன் உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியில் 70 இலட்சம் ரூபா செலவில் யு.என்.ஹெபிடாட்டின் அனுசரணையுடன் ஜேர்மன் நாட்டு நியுரம்பேக் நகர மக்களின் நிதியுதவியுடனும் கல்முனை மாநகர சபையின் நிதி மூலமும் இவ் வடிகான்  அமைக்கப்படவுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .