2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

சேதனப்பசளை உற்பத்தி செய்கை முறை

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

'திவி நெகும' வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்குட்பட்ட வீட்டுத்தோட்ட முயற்சியாளர்களுக்கிடையே சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக  இன்று செயல்முறை பயிற்சி திட்டம் ஆராம்பித்து வைக்கப்பட்டது.

நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ.ஹார்லிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை விவசாய வலயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ், விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் வை.பி.இக்பால், தலைமைக் காரியாலய கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எஸ்.மௌலானா, நிந்தவூர் விவசாய போதனாசிரியர்களான எம்.வை.நியாஸ் ஜே.எம்.பாஸில் உட்பட விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X