2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பாலமுனை – அரசடி வீதி செப்பனிடுமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட பாலமுனை – அரசடி வீதி மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ளதால், அவ்வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் மிகக் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த வீதியினை புனரமைத்துத் தருமாறு பலமுறை இப்பகுதி அரசியல்வாதிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் அவை கவனத்திற் கொள்ளப்படவில்லை எனவும் இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாலமுனை பிரதான வீதியிலிருந்து தொடங்கும் மேற்படி அரசயடி வீதியினூடாக தினமும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.

இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல்வயல்களுக்கு விவசாயிகள் சென்றுவரும் பாதையாக மேற்படி அரசயடி வீதி அமைந்துள்ளதோடு, சம்புநகர், ஆலங்குளம், தீகவாபி மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களுக்கும் இவ்வீதியினூடாக மக்கள் பயணித்து வருகின்றனர்.

மிக நீண்ட காலமாக சேதமடைந்து காணப்படும் இந்த வீதியினை புனரமைத்துத் தருமாறு இப்பிரதேசத்து அரசியல்வாதிகளிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ள போதும், இதுவரை எவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் கிழக்கு மாகாண மு.கா.உறுப்பினர் மசூர் சின்னலெப்பை போன்ற பலர் மேற்படி அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் இதுவரை இந்த அரசயடி வீதி திருத்தப்படாமல் கவனிப்பின்றிக் கிடப்பது கவலை தரும் விடயமாகும் என மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0

  • றுசைக் Wednesday, 13 April 2011 08:45 PM

    எமது பிரதேச அரசியல்வாதிகளின் கவனத்திற்கு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .